×

ராமதாசுடன் ஜெயவர்தன் சந்திப்பு

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், பாமக நிறுவனர் ராமதாசை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாமக நிறுவனர் ராமதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மேலும், சோழிங்கநல்லூர் பகுதியில் 85க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த பயிற்சி தரும் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வருடம்தோறும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டு, வேலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிண்டி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை குறைக்க நடைமேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

பள்ளிக்கரணையில் புதிய பன்நோக்கு மருத்துவமனை அமைக்க 33 கோடியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் முதல்கட்ட பணிகள் நடைபெற உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க 25 கோடி நிதி பெற்று பணிகள் நடைபெறுகிறது.  மத்திய அரசின் நிதி மூலம் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. பெருங்குடி குப்பை கிடங்கை அகற்றவும் 1,200 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்லடுக்கு கொண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்தில் சதர்லேண்ட் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  
இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayawardena ,meeting ,Ramadoss , Jayawardena meeting, Ramadoss
× RELATED குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...